படுக்கையில் படுத்துக் கொண்டு வாதிட்ட வழக்கறிஞருக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்..!

Scroll Down To Discover
Spread the love

கொரோனா பரவல் காரணமாக உச்சநீதிமன்றத்தில் காணொலி காட்சி மூலம் வழக்கு விசாரணை நடந்து வருகிறது.

இந்த நிலையில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு ஒன்று நேற்று முன்தினம் (ஜூன் 20) விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், டீ சர்ட் அணிந்தபடி, கட்டிலில் படுத்துக் கொண்டு வழக்கில் வாதாடினார்.

இதனால் ஆத்திரம் அடைந்த நீதிபதி, காணொலிகாட்சி வாயிலாக வழக்கு விசாரணைக்கு ஆஜராகும் வழக்கறிஞர்கள், அணிய வேண்டிய உடைகள், பின்னணி உள்ளிட்டவை குறித்து தெளிவான வழிகாட்டுதல் நெறிமுறைகள் ஏற்கெனவே வழங்கப்பட்டுள்ளன.அவற்றை வழக்கறிஞர்கள் அனைவரும் பின்பற்ற வேண்டும். தனிபட்ட முறையில் ஒரு நபர் வீட்டில் எப்படி வேண்டுமானாலும் இருந்து கொள்ளலாம். ஆனால், வழக்கு விசாரணைக்கு ஆஜராகும்போது குறைந்தபட்ச ஒழுக்கத்தை கடைபிடிக்க வேண்டும் என்று நீதிபதி காட்டமாக தெரிவித்தார்.இதையடுத்து சம்பந்தப்பட்ட வழக்கறிஞர் மன்னிப்பு கோரினார். அதனை நீதிபதி ரவீந்திர பட் ஏற்றுக் கொண்டார்.