தமிழக வீராங்கனை இளவேனில் வாலறிவன் மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூவை சந்தித்து வாழ்த்து பெற்றார்..!

Scroll Down To Discover
Spread the love

பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனீரோ நகரில் நடைபெற்ற உலக துப்பாக்கிச்சுடுதல் போட்டியில் 5 தங்கம் உட்பட 9 பதக்கங்கள் வென்று இந்தியா முதலிடம் பிடித்தது.இதில் தமிழக வீராங்கனை இளவேனில் வாலறிவன் பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் தங்கம் வென்று அசத்தினார். இந்நிலையில் இதில் பதக்கம் வென்ற வீரர்கள் டெல்லியில் மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூவை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

அவர்களை பாராட்டிய பின் பேசிய மத்திய அமைச்சர், டோக்கியோ ஒலிம்பிக்கில் துப்பாக்கிச்சூடுதலில் பங்கேற்க 9 இந்திய வீரர்கள் தகுதி பெற்றுள்ள நிலையில், இது 12ஆக உயர வாய்ப்புள்ளதாகவும், இதனால் அதிக இந்திய வீரர்கள் ஒலிம்பிக்கில் பங்கேற்று புதிய சாதனை படைக்க உள்ளதாகவும் கூறினார்.தற்போது துப்பாக்கிசுடுதலில் சர்வதேச அளவில் சிறந்து விளங்கும் இந்திய அணி, ஒலிம்பிக்கிலும் பதக்கங்களை குவிக்கும் என்று அவர் கூறினார்.

…நமது நிருபர்