சீன உணவுகளை புறக்கணிக்க வேண்டும் – மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே..!

Scroll Down To Discover
Spread the love

இந்தியாவின் லடாக்கின் கல்வான் பகுதியில் ஐந்து வாரங்களாக இந்திய – சீன படைகள் முகாமிட்டிருந்த நிலையில், ( ஜூன் 15) மாலையில், திடீரென மோதல் ஏற்பட்டது. சீன ராணுவம் நடத்திய அட்டூழிய தாக்குதலில், நம் வீரர்கள், 20 பேர் வீரமரணம் அடைந்தனர். எல்லையில் உள்ள நிலையை மாற்றியமைக்க முயன்ற நம் ராணுவத்திற்கு பதிலடி கொடுத்தனர். இதில் 43 சீன வீரர்கள் உயிரிழந்தனர். இதனால், இரு நாடுகள் இடையே பதற்றம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் சீன பொருட்களை புறக்கணிக்க வேண்டும் என்ற கோரிக்கை இந்தியாவில் எழுந்துள்ளது. இந்தியா முழுவதும் சீனாவில் தயாரிக்கப்பட்ட பொருட்களை புறக்கணிக்க கோரி போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.சீனாவுடன் வர்த்தக உறவுகளை துண்டிக்க கோரியுள்ளனர். 500 வகையான சீனப் பொருட்களை பட்டியலிட்டு அவற்றை புறக்கணிக்கப் போவதாக “கெய்ட்” என்றழைக்கப்படும் அகில இந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

இந்நிலையில், மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே கூறுகையில்:-


மேட்-இன்-சீனா தயாரிப்புகளை புறக்கணிப்பதைத் தவிர, சீனாவை காயப்படுத்த குடிமக்கள் எடுக்கக்கூடிய நடவடிக்கைகளில் ஒன்று, அவர்களின் உணவை சாப்பிடுவதை நிறுத்துமாறு மத்திய அமைச்சர் கேட்டுக் கொண்டார்.மேலும், ஓட்டல்களில் சீன உணவு வகைகளை விற்பனை செய்வதற்கும் தடை விதிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியதாக ஏஎன்ஐ செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.