வீரமரணம் அடைந்த இந்திய ராணுவ வீரர்கள் 20 பேரின் பெயர்கள் வெளியீடு.!

Scroll Down To Discover
Spread the love

இந்தியாவின் லடாக்கின் கல்வான் பகுதியில் ஐந்து வாரங்களாக இந்திய – சீன படைகள் முகாமிட்டிருந்த நிலையில், நேற்று முன்தினம்( ஜூன் 15) மாலையில், திடீரென மோதல் ஏற்பட்டது. சீன ராணுவம் நடத்திய அட்டூழிய தாக்குதலில், நம் வீரர்கள், 20 பேர் வீரமரணம் அடைந்தனர். எல்லையில் உள்ள நிலையை மாற்றியமைக்க முயன்ற நம் ராணுவத்திற்கு பதிலடி கொடுத்தனர்.

இதில் 43 சீன வீரர்கள் உயிரிழந்தனர். இதனால், இரு நாடுகள் இடையே பதற்றம் ஏற்பட்டுள்ளது. சீனா அட்டூழியத்தால், வீரமரணம் அடைந்தவர்களில் ராமநாதபுரத்தை சேர்ந்த பழனியும் ஒருவர். இவர் ராணுவத்தில் ஹாவில்தாராக பணிபுரிந்து வந்தார்.

மேலும் சிலர் பலத்த காயமடைந்திருப்பதால், உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் உயரலாம் என அஞ்சப்படுகிறது.இந்நிலையில், சீன ராணுவத்துடன் நடந்த மோதலில் உயிரிழந்த வீரர்களின் பெயர்கள் வெளியாகி உள்ளன.

1. சந்தோஷ் பாபு
2. சுனில் குமார்
3. நந்துராம்
4. சி.கே.பிரதான்
5. ராஜேஷ் ஓரான்
6. கே.கே.ஓஜா
7. கணேஷ் ராம்
8. கணேஷ் ஹஸ்தா
9. சந்தன் குமார்
10. தீபக் சிங்
11. அமான் குமார்
12. குந்தன் குமார்
13. சத்னம் சிங்
14. மன்தீப் சிங்
15. ஜெய் கிஷோர் சிங்
16. பிபுல் ராய்
17. குர்தேஜ் சிங்
18. அங்குஷ்
19. குர்வீந்தர் சிங்
20. கே.பழனி (தமிழ்நாடு)