இந்தியா – சீனா எல்லைப்பிரச்னை குறித்து அமெரிக்கா உன்னிப்பாக கவனித்து வருகிறது : அமெரிக்க வெளியுறவுத்துறை

Scroll Down To Discover
Spread the love

லடாக் எல்லையில் சில வாரங்களாக இந்தியா – சீனா இடையே பதற்றம் நீடித்து வருகிறது. இரு நாட்டு படைகளை திரும்பப் பெறுவது தொடர்பாக கல்வான் பள்ளத்தாக்கு மற்றும் ஹாட் ஸ்பிரிங்ஸ் பகுதிகளில் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. இரு நாட்டு ராணுவத்தின் படைப்பிரிவு தளபதிகள் அளவிலான பேச்சுவார்த்தையை தொடர்ந்து, இரு நாட்டு படைகளும் திரும்பப் பெறப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், கல்வான் பள்ளத்தாக்குப் பகுதியில் இந்திய படைகள் மீது சீன ராணுவம் திடீரென அத்துமீறியது.
இதுகுறித்து வாங் வென்வென் டுவிட்டரில், ‘லடாக்கில் உள்ள கால்வான் பள்ளத்தாக்கில் இந்தியாவுடன் ஏற்பட்ட மோதலில் 5 சீன வீரர்கள் கொல்லப்பட்டனர்; 11 பேர் காயமடைந்தனர்’ என பதிவிட்டுள்ளார். இதனை தொடர்ந்து செய்திதாள் தரப்பில் டுவிட்டரில், ‘சீனா தரப்பில் எவ்வளவு பேர் பலியாகினர் என்பதை சீன அரசு தெரிவிக்கவில்லை’ என பதிவிட்டுள்ளது.இதனை தொடர்ந்து குளோபல் டைம்ஸின் தலைமை ஆசிரியர், ‘கால்வான் பள்ளத்தாக்கில் நடந்த மோதலில், சீன தரப்பிலும் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. சீன அரசின் நிலைப்பாட்டை, இந்தியா பலவீனமாக எடுத்துக் கொள்ள வேண்டாம்’ என டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.இந்திய தரப்பில் 20 வீரர்கள் வீர மரணம் அடைந்துள்ளதாக, இந்திய அரசு உறுதிப்படுத்தி உள்ளது. சீன தரப்பில் 43 பேர் பலியானதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

லடாக் மோதல் சம்பவம் குறித்து ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், அமெரிக்காவின் வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் கூறியதாவது: இந்தியா – சீனா எல்லைப்பிரச்னை குறித்து அமெரிக்கா உன்னிப்பாக கவனித்து வருகிறது. இந்திய தரப்பில் 20 வீரர்கள் வீர மரணம் அடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களது குடும்பங்களுக்கு எங்களது ஆழ்ந்த இரங்கல்கள்.எல்லையில் இந்திய, சீன படைகள் வாபஸ் பெறப்பட்டுள்ளது. தற்போதைய சூழலில் அமைதி திரும்ப இருநாடுகளும் எடுக்கும் முயற்சியை அமெரிக்கா ஆதரிக்கிறது. ஜூன் 2ம் தேதி, இந்திய பிரதமர் மோடியுடன், அமெரிக்க அதிபர் டிரம்ப் தொலைபேசி மூலம் கலந்துரையாடிய போது, இந்திய – சீன எல்லை நிலவரம் குறித்து விவாதித்தனர். இவ்வாறு அவர் கூறினார்.