வெற்றிகரமாக ஒரே நேரத்தில் இரண்டடுக்கு கண்டெய்னர் போக்குவரத்து சேவையை இயக்கிய இந்திய ரயில்வே..!

Scroll Down To Discover
Spread the love

போக்குவரத்து துறையில் இந்தியாவின் வளர்ச்சி தற்போது மேம்படுத்தப்பட்ட கட்டமைப்பை எட்டியுள்ளது. குறிப்பிட்டு, இரயில்வே துறை சார்ந்த கட்டமைப்புகளில் மத்திய அரசு வளர்ச்சியை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.ரயில்வே பயணிகள் மூலம் ரயில்வே துறைக்கு வருமானம் கிடைத்தாலும், மறுபுறம், சரக்குப் போக்குவரத்தாலும் லாபம் கண்டு வருவது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ரயில்வே துறையின் ஒட்டுமொத்த வருவாயில் மூன்றில் ஒரு பங்கு வருவாய் சரக்கு போக்குவரத்து வாயிலாகவே கிடைக்கிறது என்றும் கூறப்படுகிறது.

இந்தியாவில் சரக்குகளை ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்ல ரெயில்வேத்துறை முக்கிய பங்கு வகிக்கிறது. இதற்கென தனி ரெயில்களை இயக்கி வருகிறது. சரக்கு ரெயில்களின் நீளம் பயணிகளின் நீளத்தை விட கூடுதலாக இருக்கும்.ஆனால் பயணிகள் ரெயில் உயரத்திற்குத்தான் சரக்கு ரெயில்கள் குடோன்கள் இருக்கும். குடோன் இல்லாதவற்றில் ஒரு பெட்டிக்கான இடத்தில் ஒரு கண்டெய்னரை மட்டுமே வைக்க முடியும்.ஒன்றன்மீது ஒன்றை வைத்தால் கூடுதலான சரக்குகளை கொண்டு செல்லலாம் என ரெயில்வேத்துறை எண்ணியது.


இதற்கான திட்டத்தை தீட்டி அதற்கேற்ப வழித்தடத்தையும் கண்டறிந்தது. குஜராத்தின் பாலன்பூரில் இருந்து போடத் வரையில் அமைக்கப்பட்ட வழித்தடத்தில் இன்று இரண்டு அடுக்குகள் கொண்ட கண்டெய்னரை சுமந்து கொண்டு ரெயில் சிறப்பாக இயக்கப்பட்டது.