கரைபடியாத கரம்..! கேரளா மாநிலத்தின் புதிய கவர்ணர் ஆரீப் முகமது கான்..!!

Scroll Down To Discover
Spread the love

தெலுங்கானா ஆளுநர் திருமதி தமிழிசை அவர்களை நமக்கு நன்றாகவே தெரியும் ஆனால் கேரள மாநில ஆளுநர் திரு ஆரிப் முகமது கான் அவர்களைப்பற்றி தெரியுமா…? இராஜிவ் காந்தி அமைச்சரவையில் அமைச்சராக பதவி வகித்தவர். ஷாபானு வழக்கில் அரசின் நிலைப்பாட்டை கடுமையாக எதிர்த்தவர்.

பாராளுமன்றத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பை ஆதரித்து பேசியவர். அதற்காக அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தவர். முத்தலாக் சட்டத்தை ஆதரித்தவர். பொது சிவில் சட்டம் வேண்டும் என்று வலியுறுத்தி வருபவர். அப்பழுக்கற்ற தேசியவாதி. டாக்டர் அப்துல் கலாம் அவர்களை குடியரசு தலைவராக அமர்த்தி அழகு பார்த்தது பாஜக. இப்போது ஆரிப் முகமது கான்! ஒரு தேசிய வாதி ஆளுநராக நியமிக்கபட்டுள்ளார். இந்த தேசத்தில் இப்போதெல்லாம் நேர்மை மட்டுமே ஜெயிக்கும் என்பது எவ்வளவு பெரிய ஆரோக்கியமான விஷயம்!

நமது நிருபர்