திருப்பதி கோவில் குறித்து அவதூறு பேச்சு : தேவஸ்தானம் போலீசில் புகார் – நடிகர் சிவகுமார் மீது பாய்ந்தது வழக்கு..!!

Scroll Down To Discover
Spread the love

திருப்பதி மலையில் தவறுகள் நடைபெறுவதாகவும், அங்கு பக்தர்கள் செல்ல வேண்டாம் என்றும் நடிகர் சிவகுமார் பேசி வெளியான வீடியோ ஒன்று தொடர்பாக தமிழ் மாயன் என்பவர் திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு ஈமெயில் மூலம் தகவல் அனுப்பியுள்ளார்.

திருமலை திருப்பதி தேவஸ்தானம், திருமலை இரண்டாவது காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளது. அந்த புகார் மனு விபரம்: தேவஸ்தானத்தை விமர்சிக்கும் வகையில், சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியாவதால், பக்தர்கள் மன வேதனை அடைகின்றனர். எனவே, பக்தர்கள் மன வேதனைப்படும் வகையில், ஏழுமலையான் குறித்தும், தேவஸ்தானம் குறித்தும், அவதுாறாக பேசுவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது.


தமிழ் மாயன் கொடுத்த தகவலின் அடிப்படையில் திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் திருப்பதி மலையில் உள்ள இரண்டாவது நகர காவல் நிலையத்தில் நடிகர் சிவக்குமார் மீது புகார் செய்யப்பட்டது. தேவஸ்தானம் அளித்த புகாரை பெற்றுக்கொண்ட போலீசார் சிவக்குமார் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.


மேலும், ‘திருமலை இதற்கு முன், புத்த விகாரமாக இருந்தது. தலைமுடி காணிக்கை என்பது, ஹிந்துக்களின் வழக்கம் அல்ல; பவுத்தர்கள் பழக்கம். ‘திருமலையில் இருந்த புத்தர் சிலையை எடுத்து விட்டு, ஏழுமலையான் சிலை நிறுவப்பட்டுள்ளது’ முகநுால் பக்கத்தில், மே, 7ல், ஒருவர் பதிவிட்டிருந்தார்.இவை அனைத்தும், தேவஸ்தானத்தின் மீது, அவதுாறு பரப்ப சித்தரிக்கப்பட்டவை. எனவே, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படியும், காவல் நிலையத்தில், தேவஸ்தானம் புகார் அளித்துள்ளது. அதனால், தவறான தகவல்கள் பரப்பிய அனைவர் மீதும், திருமலை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

முன்னதாக சிவகுமாரின் மருமகளும் சூர்யாவின் மனைவியுமான ஜோதிகா தஞ்சை பிரகதீஸ்வரர் கோயில் குறித்து பேசிய வீடியோ சமூகவலைதளத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியது. அப்போது ஜோதிகாவின் கருத்துக்கு எதிராக குரல்கள் எழுந்தன.