இந்துகளின் கடைகளை குறிவைத்து தாக்கிய கும்பல்கள்: சிஏஏ சட்டத்தை எதிர்த்து, டெல்லியில் நடந்த கலவரத்தில் 5வது குற்றப்பத்திரிகை தாக்கல்

Scroll Down To Discover
Spread the love

டெல்லியில் குடியுரிமை திருத்த சட்டம் எதிர்ப்பு போராட்டத்தின் போது இருதரப்பினருக்கு இடையே மோதல் ஏற்பட்டது. மாஜ்பூர் பகுதியில் சி.ஏ.ஏ. எதிர்ப்பாளர்களும், ஆதரவாளர்களும் கற்களை வீசி தாக்குதலில் ஈடுபட்டனர். இதையடுத்து அங்கு விரைந்த போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி கூட்டத்தை கலைக்க முயன்றனர். இதனால் அந்த பகுதி போர்களமானது. கடைகள் அடைக்கப்பட்டன. மாஜ்பூர்- பாரப்பூர் இடையிலான மெட்ரோ ரயில்கள் போக்குவரத்து நிறுத்தப்பட்டு ரயில்நிலைய
கதவுகள் அடைக்கப்பட்டன. போராட்டக்காரர்கள் கற்களை வீசி தாக்கியதில் போலீஸ் தலைமைக்காவலர் ரத்தன்லால் என்பவர் படுகாயம் அடைந்தார். அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்

மேலும் வடகிழக்கு டெல்லியில், கலவரம் வெடித்தது. அப்போது, அனில் ஸ்வீட்ஸ்’ என்ற இனிப்பு கடையின் குடோனுக்கு, கலவரக்காரர்கள் தீ வைத்தனர். இதில், அக்கடையின் ஊழியர், தில்பார் நெகி என்பவர், தீயில் கருகி உயிரிழந்தார். இக்கலவரம் தொடர்பாக, 12 பேரை, போலீசார் கைது செய்தனர். பல்வேறு பிரிவுகளில், அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதுவரை, நான்கு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில், ஐந்தாவது குற்றப்பத்திரிகை, டில்லி நீதிமன்றத்தில், நேற்று தாக்கல் செய்யப்பட்டது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: வடகிழக்கு டில்லியின் பல்வேறு பகுதிகளில், கடந்த பிப்ரவரியில் மத கலவரம் வெடித்தது. பிரிஜ்புரி புலியா பகுதியில் இருந்து, மாலை 3:00 மணி முதல் கும்பலாக வரத்துவங்கி கலவரக்காரர்கள், ஹிந்துக்களை குறிவைத்து தாக்கிய கும்பலால் ஹிந்துக்களின் சொத்துக்களை, விடியவிடிய குறிவைத்து, தாக்கினர். அப்போது, அனில் ஸ்வீட்ஸ்’ என்ற இனிப்பு கடையின் குடோனுக்கு தீ வைத்தனர். இதில், அக்கடையின் ஊழியர், தில்பாக் நெகி என்பவர், தீயில் கருகி உயிரிழந்தார். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.