மாசு கட்டுப்பாட்டை தடுக்க சென்னை மாநகராட்சி அதிரடி…! பொது மக்கள் வரவேற்பு…!!!

Scroll Down To Discover
Spread the love

சென்னை மாநகராட்சி நிர்வாகம் வெளியிட்டுள்ள வரைவின்படி பிளாஸ்டிக் ஒழிப்பை தீவிரப்படுத்த பல புதிய முறைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தலைமையில் சுகாதார அதிகாரிகள் மதுசூதனரெட்டி, டாக்டர் செந்தில் குமார், தலைமை பொறியாளர்கள் புகழேந்தி, மகேசன், ராஜேந்திரன், மற்றும்  அதிகாரிகளின் முன்னிலையில் நடை பெற்ற தொடர் கூட்டத்தில் ஏற்பட்ட முடிவான கூட்டத்தின் தீர்மானத்தில். சுற்றுச்சூழல் மாசுபாட்டைத் தடுக்கும் நோக்கத்தோடு ஒரு முறை மட்டும் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்குத் தமிழக அரசு தடை விதித்தது. அரசின் உத்தரவை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்யும் நிறுவனங்கள் குறிப்பிட்ட பிளாஸ்டிக் பொருட்கள் மீது மறுசுழற்சி செய்யக்கூடியது அல்லது எரியூட்டக்கூடியது எனத் தமிழில் அல்லது ஆங்கிலத்தில் அச்சிட்டிருக்க வேண்டும் என்றும், தவறினால் ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.


தனிநபர்கள் தங்கள் வசிப்பிடத்தில் பிளாஸ்டிக்கை எரித்தால் 1000 ரூபாய் அபராதம் என்றும், பொது இடத்தில் எரித்தால் 2ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் பிளாஸ்டிக் கழிவை துப்புரவு செய்யும் போது பிரித்து வழங்காவிடில் தனிநபருக்கு 100 ரூபாய் முதல், 5ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என்றும் சென்னை மாநகராட்சி வரைவு வெளியிட்டுள்ளது. இந்த திட்டம் நடை முறைக்கு வந்ததினால் பொது மக்களிடையே மிகவும் வரவேற்ப்பு கிடைத்துள்ளது என்பது குறிப்பிடதக்கது.

நமது நிருபர்
பாண்டியன்