பட்டியலின மக்களை அவமானப்படுத்திய திமுக MP, MLAக்களை ஸ்டாலின் கண்டிக்கவில்லை – பாஜக தலைவர் முருகன் குற்றச்சாட்டு

Scroll Down To Discover
Spread the love

பட்டியலின மக்களை அவமானப்படுத்திய திமுக MP, MLAக்களை ஸ்டாலின் கண்டிக்கவில்லை என பாஜக தலைவர் முருகன் குற்றச்சாட்டு கூறியுள்ளார்.

சென்னையில் பாஜக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மத்திய அரசின் முன் திட்டமிடல் காரணமாக இந்தியாவில் கொரோனா பாதிப்பு கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும், உலக நாடுகளுக்கு கொரோனா பாதுகாப்பு கவசங்கள் உள்ளிட்டவைகளை ஏற்றுமதி செய்திடும் அளவிற்கு இந்தியா வளர்ச்சி பெற்றுள்ளதாகவும் பெருமிதம் தெரிவித்தார்.

மேலும் கருப்பு பணத்தை ஒழிப்பதில் மத்திய அரசு தீவிரமாக உள்ளதாக தெரிவித்த அவர் GOD MAN போன்று இந்துமதத்தை இழிவு படுத்தும் வகையில் தொடர்ந்து வெளியாகி வரும் வெப் சீரியல்களுக்கு சென்சார் தேவை என அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளதாகவும் இது கடுமையாக கண்டிக்கத்தக்கது என்றும் தெரிவித்தார்


தமிழகத்தில் கட்டுப்பாடு பகுதிகள் தவிர்த்து, இதர பகுதிகளில் கோவில்கள் திறக்க அனுமதிக்க வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளதாக கூறினார். வன்கொடுமை புகார் உள்ள திமுக எம்பிக்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் ஸ்டாலின் மவுனம் காப்பது அவரும் அதை ஆதரிக்கிறாரோ என்ற எண்ணத்தை ஏற்படுத்துவதாகவும் முருகன் குற்றஞ்சாட்டினார்.