ஜனநேசன் ஆசிரியர் ஏஆர். வேலுப்பிள்ளை மறைவு – மும்பை மாநகர பாஜக ராஜா உடையார் இரங்கல்.!

Scroll Down To Discover
Spread the love

ஜனநேசன் ஆசிரியர் ஏ,ஆர் வேலுப்பிள்ளை மறைவுக்கு மும்பை மாநகர பா.ஜ.க ராஜா உடையார் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்:-

தேசிய ஊடகவியலாளர் நலச்சங்கத்தின் தலைவர் வி எஸ் இராமன் அவர்களின் தந்தையாகிய தேசப்பற்றாளரும் காமராஜரின் சீடரும் ஜனநேசன் ஆசிரியரும் திருவிதாங்கூர் சமஸ்தான தலைவர்களில் ஒருவருமான திரு AR வேலுப்பிள்ளை அவர்கள் கன்னியாகுமரி மாவட்டம், ஆலங்கோட்டில் உள்ள தனது இல்லத்தில் 22.05.2020 வெள்ளி கிழமை காலை 10.00 மணிக்கு சிவலோக பதவி அடைந்து விட்டார் என்ற செய்தியை அறிந்து அதிர்ச்சியும் துயரமும் அடைந்தேன்,

திரு AR வேலுப்பிள்ளை அவர்களின் மறைவு ஈடு செய்ய முடியாத பேரிழப்பு அன்னாரின் மறைவுக்கு மும்பை பாரதிய ஜனதா கட்சி தமிழ் பிரிவு சார்பிலும் எனது சார்பிலும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாரை இழந்து வாடும் அவரது மகன் திரு வி எஸ் இராமன் அவரின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்து கொள்கிறேன் என கூறியுள்ளார்.!