அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு, தபால் அலுவலகங்களில் ‘ஜீரோ’ கையிருப்பு வங்கி கணக்கு

Scroll Down To Discover
Spread the love

மத்திய மாநில அரசுகளால் வழங்கப்படும் முதியோர் உதவித்தொகை விதவை உதவித்தொகை ஜன்தன் உதவித் தொகைகளை வங்கிக் கணக்கிலிருந்து AePS மூலமாக மக்கள் தங்கள் வீட்டிலேயே அஞ்சல் துறையின் மூலம் பெற்றுக்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு, தமிழக தொழிலாளர் நலத்துறையால் அளிக்கப்படும் உதவித்தொகையை அஞ்சல் துறை மூலம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தமிழக அரசின் ஆணைப்படி அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு சென்னை வடக்கு கோட்டத்துக்கு உட்பட்ட அனைத்து அஞ்சல் அலுவலகத்திலும் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி மூலம் கட்டணம் இன்றி கணக்கு துவங்கும் பணி நடந்து வருகிறது. அதில் தொழிலாளர் நலத்துறை அளிக்கும் உதவித்தொகை வரவு வைக்கப்படும். பின்னர் இந்த தொகையை தபால்காரர் மூலம் வீட்டுலிருந்தே பெற்றுக்கொள்ளலாம்.

இச்சேவையை பெற அமைப்பு சாரா தொழிலாளர் தங்களின் உறுப்பினர் அட்டை, ஆதார் அட்டை மற்றும் அலைபேசி எண்களை தங்கள் அருகில் உள்ள அஞ்சலக தபால்காரரிடம் கொடுத்து கணக்கு துவங்கிக் கொள்ளுமாறு சென்னை வடக்கு கோட்டத்தின் அஞ்சலக முதுநிலைக்கண்காணிப்பாளர் கேட்டுக்கொள்கிறார்.