பாதுகாப்பற்ற நிலையில் கோவிலில் மின் இணைப்பு..! பக்தர்கள் அச்சம்…!!

Scroll Down To Discover
Spread the love

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் அறநிலையத்துறைக்கு பாத்தியபட்ட செண்பகவல்லியம்மன் கோவில் அருகே உள்ள பெருமாள்கோவில் கட்டிடத்தில் பாதுகாப்பற்ற முறையில் மின் இணைப்பால் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் உள்ளது. மின்மீட்டர் மெயின் சுவிட்ச் பழுதடைந்த நிலையில் உள்ளன.

வயர்கள் உடனடியாக சரிசெய்திடவேண்டும் தனியாருக்கு கோவில் கட்டிடத்தின் வழியாக செல்லும் மின்வயர்களை மாற்றம் செய்து கோவில் கட்டிடத்தின் மீது செல்லாவண்ணம் அறநிலையத்துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோவிலுக்கு வரும் பக்தர்களும் பொதுமக்களும், சமுக ஆர்வலர்களும் கூறி வருகிறார்கள்..

நமது நிருபர்
தூத்துக்குடி ப.பரமசிவம்