அயோத்தி வழக்கை, ‘வீடியோ கான்பரன்ஸ்’ மூலம் நடத்த சிறப்பு நீதிமன்றம் திட்டம்

Scroll Down To Discover
Spread the love

உத்தர பிரதேசத்தில் உள்ள அயோத்தியில், சர்ச்சைக்குரிய நிலத்தில் இருந்த, பாபர் மசூதி கட்டடம், 1992ல் இடிக்கப்பட்டது. பாபர் மசூதி இடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த, பா.ஜ., மூத்த தலைவர்கள், அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, கல்யாண் சிங் உள்ளிட்டோரை விடுவித்து, 2001-ம் ஆண்டு, அலகாபாத் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து, சி.பி.ஐ., உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது.

‘அலகாபாத் உயர் நீதிமன்ற தீர்ப்பு தவறு’ என, தெரிவித்த உச்ச நீதிமன்றம், அத்வானி உள்ளிட்டோர் மீதான வழக்கை, மீண்டும் விசாரிக்கவும், வழக்கை, ரேபரேலி நீதிமன்றத்திலிருந்து, லக்னோ சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றியும் உத்தரவிட்டது.

இந்நிலையில், இவ்வழக்கில், அனைத்து விசாரணைகளையும், வரும் ஆகஸ்ட், 31ம் தேதிக்குள் முடிக்க, சிறப்பு நீதிமன்றத்திற்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியது.ஊரடங்கு காரணமாக, வழக்கு விசாரணை முடங்கி இருந்த நிலையில், விசாரணையை துவக்க, சிறப்பு நீதிமன்றம் முடிவு செய்து உள்ளது. ‘வீடியோ கான்பரன்ஸ்’ மூலம் விசாரணையை நடத்த சிறப்பு நீதிமன்ற நீதிபதி, சுரேந்திர குமார் யாதவ் திட்டமிட்டுள்ளார்.