‘விஸ்வாசம்’ படத்தின் சில காட்சிகளை, ட்ரோன் மூலம் படமாக்கிய அஜித் : வெளியான தகவல்..!

Scroll Down To Discover
Spread the love

அஜித் நடிப்பில் கடந்த 2019ஆம் ஆண்டு வெயாகி சூப்பர் ஹிட்டான திரைப்படம் ‘விஸ்வாசம்’.பொங்கல் விருந்தாக இந்தப் படம் ரிலீஸானது. சிவா இயக்கத்தில் அஜித், நயன்தாரா, அனிகா, விவேக், ஜெகபதி பாபு, ரோபோ சங்கர் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘விஸ்வாசம்’. 2019-ம் ஆண்டு ஜனவரி 10-ம் தேதி இப்படம் வெளியானது. வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பெரும் வரவேற்பைப் பெற்றது. ஆக்‌ஷன் குடும்பப் படமான இது, ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது.

இந்நிலையில் படம் வெளியாகி ஓராண்டுக்கு மேல் ஆகும் நிலையில் இந்தப் படத்தில் சில காட்சிகளை நடிகர் அஜித் ஒளிப்பதிவு செய்ததாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. ‘விஸ்வாசம்’ படத்தின் டிஜிட்டல் ஒளிபரப்பு உரிமையைப் பெற்றுள்ள அமேசான் ப்ரைம், இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது.


ட்ரோன் மூலம் சில டாப் ஆங்கிள் காட்சிகளை அஜித் படமாக்கியுள்ளதாகத் தெரிவித்துள்ள அமேசான், குறிப்பாக தயாரிப்பாளர்களின் பெயர் டைட்டில் கார்டில் இடம்பெறும் காட்சியைப் படமாக்கியிருப்பதாகத் தெரிவித்துள்ளது. அந்த புகைப்படத்தோடு, அஜித் ட்ரோனை இயக்கும் புகைப்படத்தையும் ட்விட்டரில் வெளியிட்டுள்ளது.
இதனை தற்போது அஜித் ரசிகர்கள் அதிகளவில் பகிர்ந்து வருகின்றனர்.