கொரோனாவை ஒழிக்க தொழில்நுட்ப உதவி தேவை : தேசிய தொழில்நுட்ப தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி ட்விட்

Scroll Down To Discover
Spread the love

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதனை தடுக்கும் நடவடிக்கைகளில் மத்திய மற்றும் மாநில அரசுகள் தீவிரமுடன் ஈடுபட்டு வருகின்றன. எனினும், பொதுமக்கள் அளிக்கும் ஒத்துழைப்புக்கு ஏற்ப கொரோனா பரவல் கட்டுக்குள் வரும் என்று அரசு தெரிவித்து வருகிறது.நாட்டில் கொரோனா பாதிப்புக்கு, பலி எண்ணிக்கை 2,109 ஆக நேற்று உயர்வடைந்தது. 19 ஆயிரத்து 358 பேர் குணமடைந்தும், 41 ஆயிரத்து 472 பேர் தொடர் சிகிச்சையிலும் உள்ளனர் என தெரிவிக்கப்பட்டது. இதனால் இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 62 ஆயிரத்து 939 ஆக உயர்வடைந்து இருந்தது.

இந்நிலையில் இன்று தேசிய தொழில்நுட்ப தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி டுவிட்டரில் வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது:தேசிய தொழில்நுட்ப தினத்தில், மற்றவர்களின் வாழ்க்கையில் சாதகமான மாற்றத்தை கொண்டு வர பாடுபடும் அனைவருக்கும் , தேசம் வணக்கம் செலுத்துகிறது. கடந்த 1998 ம் ஆண்டு இதே நாளில் நமது விஞ்ஞானிகள் செய்த சாதனையை நாம் நினைவில் கொள்வோம். இது இந்தியாவின் வரலாற்றில், ஒரு முக்கியமான தருணமாக மாறியுள்ளது.


1998 ல் பொக்ரான் சோதனை, ஒரு வலுவான அரசியல் தலைமையால் செய்யக்கூடிய வித்தியாசத்தை காட்டியது. பொக்ரான் சோதனை, இந்திய விஞ்ஞானிகள் மற்றும் வாஜ்பாயின் தலைமை பண்பு குறித்து மன் கி பாத்தில் பேசியுள்ளேன்.


இன்று உலகத்தை கொரோனாவில் இருந்து விடுவிக்க எடுக்கப்படும் முயற்சிகளுக்கு பல வகைகளில் தொழில்நுட்பம் உதவுகிறது. கொரோனா வைரசை தோற்கடிக்க ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகளுக்கு முன்னணியில் இருந்து பணியாற்றும் அனைவருக்கும் எனது வணக்கத்தை தெரிவித்து கொள்கிறேன். பூமியை ஆரோக்கியமானதாகவும் சிறந்ததாகவும் மாற்ற, தொழில்நுட்பத்தை பயன்படுத்துவோம்.