டெல்லி டாக்டர் தற்கொலை வழக்கு : ஆம்ஆத்மி எம்எல்ஏ பிரகாஷ் ஜர்வால் அதிரடி கைது…!

Scroll Down To Discover
Spread the love

டெல்லி துர்காவிஹார் பகுதியைச் சேர்ந்த டாக்டர் ராஜேந்திர சிங், கடந்த ஏப்ரல் 18ம் தேதி தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, ராஜேந்திர சிங்கின் வீட்டில் இருந்து இரு பக்க கடிதம் சிக்கியது.

அதில், ‛தனது தொகுதி ஆம் ஆத்மி எம்எல்ஏ பிரகாஷ் ஜர்வால் என்பவர் தன்னிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்து வந்ததாகவும், கொலை மிரட்டலும் விடுத்ததாகவும்,’ எழுதப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது.

மேலும், அவரின் தொந்தரவு மற்றும் மிரட்டலால் மனவேதனை அடைந்து தற்கொலை முடிவு எடுத்ததாகவும், தன்னுடைய தற்கொலை முடிவுக்கு பிரகாஷ் ஜர்வால் தான் காரணம் எனவும் எழுதி இருந்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து பிரகாஷ் ஜர்வால் மீது கொலை மிரட்டல், தற்கொலைக்கு தூண்டுதல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இது தொடர்பாக பிரகாஷ் ஜர்வாலுக்கு, போலீசார் பலமுறை நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். ஆனால் ஆஜராகாததால் அவரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.