பாகிஸ்தானில் சிறுபான்மை மக்களாக இந்துக்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் உள்ளனர்.இந்துக்களுக்கு எதிரான வேற்றுமை மற்றும் அடிப்படை மனித உரிமைகள் மறுக்கப்படுவது ஆகியவை நீண்ட காலத்திற்கு தொடர்ந்து நடந்து வருகிறது.கொரோனா எதிரொலியாக அந்நாடு முடக்கப்பட்டு உள்ளது. இதனால் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வரமுடியாத நிலை உள்ளது. இதிலும், இந்துக்களுக்கு எதிரான வேற்றுமை தொடருகிறது என செய்திகள் வெளிவந்தன. இதற்கு ஐ.நா வும் கடும் கண்டனங்கள் தெரிவித்து இருந்து.
இந்நிலையில் பாகிஸ்தானில், ஹிந்துக்கள், கிறிஸ்துவர்கள் உள்ளிட்ட சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு தொடர்ந்து கொடுமை நிகழ்த்தப்படுவதாக, அந்நாட்டின் மனித உரிமை ஆணையம் தெரிவித்துள்ளது.
‘சிந்து மற்றும் பஞ்சாப் மாகாணங்களில், ஹிந்துக்களும், கிறிஸ்துவர்களும் கட்டாய மதமாற்றம் செய்யப்படுவது தொடர்கிறது. பஞ்சாபில், 14 வயது பெண்களை கட்டாயப்படுத்தி, இஸ்லாம் மதத்திற்கு மாற்றி, திருமணம் செய்விக்கப்படுகிறது.அஹமதியா சிறுபான்மை சமூகத்தினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். சிறுபான்மையினர் மீது, மத துவேஷ வழக்கு தொடரப்படுகிறது’ என, மனித உரிமை ஆணையம் தெரிவித்துள்ளது.
Source:-Dinamalar

														
														
														
Leave your comments here...