காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல் ; கர்னல் உள்பட 4 வீரர்கள் மரணம்..!

Scroll Down To Discover
Spread the love

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பை தடுப்பதற்கு மனித குலம் கடுமையாக போராடி வரும் நிலையில், இந்த சூழ்நிலையை பயங்கரவாத அமைப்புகள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி பல்வேறு நாசவேலையில் ஈடுபடுகின்றன.

வட காஷ்மீரில் ஹந்த்வாரா பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியுள்ளனர் என கிடைத்த தகவலை தொடர்ந்து பாதுகாப்பு படையினர் அந்த பகுதியை தங்களது கட்டுக்குள் கொண்டு வந்தனர். பின்னர் அவர்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.இதில், பயங்கரவாதிகள் திடீரென பதுங்கியிருந்து தாக்குதலில் ஈடுபட்டனர்.


இதற்கு பதிலடி தரும் வகையில் பாதுகாப்பு படையினரும் அதிரடி தாக்குதலில் ஈடுபட்டனர். தொடர்ந்து இரு தரப்பினருக்கும் இடையே கடுமையாக துப்பாக்கி சண்டை நடந்தது. இதில், கர்னல் ஒருவர், ராணுவ உயரதிகாரி மற்றும் இரண்டு ராணுவ வீரர்கள் என 4 பேர் கொல்லப்பட்டு உள்ளனர்.