தாயின் இறப்பிற்கு வரமுடியாமல் வீடியோ காலில் பார்த்து கதறி அழும் ராணுவ வீரர்…!!

Scroll Down To Discover
Spread the love

கொரோனா பரவுவதை கட்டுப்படுத்தும் விதமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்தது. மேலும் பேருந்து, ரெயில் மற்றும் விமான உள்பட அனைத்து போக்குவரத்து சேவைகளும் ரத்து செய்யப்பட்டது. இதனால் வேலை, கல்வி உள்ளிட்ட காரணங்களுக்காக வேறு மாநிலங்களுக்கு சென்றவர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்ப முடியாமல் அவதிப்பட்டு வந்தனர்.

இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலத்தில் ராணுவ வீரராக பணியாற்றி வருபவர் சக்திவேல். இவரது சொந்த ஊரான சேலம் மாவட்டம் மேட்டூர் அடுத்த புக்கம்பட்டியில், வசித்து வந்த அவரது தாயார் மாது உடல்நலக் குறைவு காரணமாக இறந்துள்ளார். ஊரடங்கு காரணமாக சொந்த ஊர் திரும்ப முடியாத சூழ்நிலையில் இருப்பதால் தாயாரின் இறுதி சடங்கில் கலந்து கொள்ள முடியாது எனவே அடக்கம் செய்து விடுமாறு சக்திவேல் கூறியுள்ளார்.

பின்னர் தாயாரின் உடலை வீடியோ காலில் காண்பிக்கப்பட்டு பார்த்து ராணுவ வீரர் கதறி அழுதார். பின்னர் தாயாரின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. காண்போர் நெஞ்சை கலங்கடிக்கும் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.