முட்டைகோஸ் விறக் முடியாமல் தவித்த தமிழக விவசாயி – உதவிய பாஜக எம்பி தேஜஸ்வி சூர்யா : குவியும் பாராட்டு..!

Scroll Down To Discover
Spread the love

கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்துவதற்காக பிறப்பிக்கப்பட்ட நாடு தழுவிய ஊரடங்கு, வருகிற மே 3-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு ஒரு மாதம் ஆகிவிட்ட போதிலும் கொரோனா பரவுவதை தடுக்க முடியவில்லை. ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறி மக்கள் பல இடங்களில் வெளியே நடமாடுவதும், மார்க்கெட், கடைகள் போன்ற இடங்களில் சமூக இடைவெளியை பின்பற்றாமல் நடந்து கொள்வதுமே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் சத்தியமங்கலத்தில் தமிழக கர்நாடக எல்லையிலில் கெட்டவாடி கிராமத்து விவசாயி கண்ணையன் முட்டைகோஸ் பயிரிட்டிருந்த நிலையில், கொரோனாவால் யாரும் வாங்க முன்வரவல்லை. இதனால் வேதனை அடைந்த விவசாயி கண்ணையன், யாராவது தன் முட்டைகோசை வாங்க முன்வருமாறு வீடியோ ஒன்றை டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.


3.5 ஏக்கர் நிலத்தில் முட்டைக்கோஸ் அறுவடைக்குத் தயாராக இருப்பதாகவும் இதற்காக நான் 4 லட்சம் ரூபாய் வரையிலும் செலவு செய்து உள்ளேன் என கூறி இருந்தார்.


இந்த வீடியோவை கண்ட பெங்களூரு தெற்கு தொகுதி பாஜக எம்.பி தேஜஸ்வி சூர்யா சார்பில் அவரது உதவியாளர் கண்ணையனை தொடர்பு கொண்டு முட்டை கோஸ்களை வாங்கி கொள்வதாக கூறியுள்ளார். தமது தொகுதி மக்களுக்கு இலவசமாக விநியோகிக்க மொத்த முட்டைக்கோசையும் விலைக்கு எடுத்துக் கொண்டுள்ளார். பின் அங்குள்ள மக்களுக்கு இலவசமாக விநியோகம் செய்யப்பட்டது. இதனால் நெகிழ்ந்துபோன விவசாயி கண்ணையன், தேஜஸ்வி சூர்யாவுக்கு நன்றி தெரிவித்துள்ளார். தற்போது எம்பி அவர்களின் இந்த செயலை பாராட்டி சமூக வலைதளங்களில் அனைவரும் பாராட்டி வருகிறார்கள்