கொரோனாவை அழிக்க வேண்டும் என்றால் உலக நாடுகள் அனைத்தும் ஒன்றிணைந்து போராட வேண்டும் – உலக சுகாதார மைய இயக்குநர் டெட்ராஸ்.!

Scroll Down To Discover
Spread the love

கொரோனா நோய்த் தொற்றின் கோரமான பாதிப்பு இனிதான் ஏற்பட உள்ளதாக உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கத்தால் ஒரு லட்சத்துக்கும் மேலானோர் உயிரிழந்துள்ளனர். கொரோனா நோய் பரவலை தடுப்பதற்காக இந்தியா உட்பட பல நாடுகள் முழு ஊரடங்கை நடைமுறைப்படுத்தியுள்ளன. தற்போது சில நாடுகள் ஊரடங்கை விலக்கிக்கொள்வது பற்றி ஆலோசித்து வருகின்றன. ஊரடங்கை விலக்கினால் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று உலக சுகாதார மையம் எச்சரித்துள்ளது.

இது குறித்து உலக சுகாதார மைய இயக்குநர் டெட்ராஸ் அத்நாம் கூறுகையில்:-  பொதுமக்கள் தனித்திருப்பதாலும், சமூக விலகலை பின்பற்றுவதாலும் வைரசை கட்டுப்படுத்த முடியாது. ஊரடங்குடன் கொரோனா பாதித்தவரை கண்டறிந்து, பரிசோதனை செய்ய வேண்டும் என்றும், தனிமைப்படுத்துதல் மற்றும் ஒவ்வொரு தொடர்புடைய நபர்களையும் கண்டறிவது அவசியம் என்பதை அரசாங்கங்கள் உறுதி செய்யவேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.இதுமட்டுமில்லாமல், கொரோனாவை அழிக்க வேண்டும் என்றால் உலக நாடுகள் அனைத்தும் ஒன்றிணைந்து போராட வேண்டும் என்றும் டெட்ராஸ் வலியுறுத்தியுள்ளார்.