இறுதி செமஸ்டர் தேர்வுகள் தினமும் காலை, பிற்பகலில் நடக்கும் – சென்னை பல்கலைக்கழகம் அறிவிப்பு

Scroll Down To Discover
Spread the love

கொரோனா பாதிப்பு காரணமாக கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வுகளை உயர்கல்வித்துறை ஒத்திவைத்து இருக்கிறது. அந்த தேர்வுகள் அடுத்த கல்வி ஆண்டின் தொடக்கத்தில் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை பல்கலைக்கழகத்தின் அனைத்து துறை தலைவர்கள், இணைப்பு கல்லூரிகளின் முதல்வர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-சென்னை பல்கலைக்கழகம் மற்றும் அதனை சார்ந்த இணைப்பு கல்லூரிகளின் இறுதி செமஸ்டர் தேர்வுகள் அடுத்த கல்வியாண்டின் ஆரம்பத்தில் கல்லூரிகள் திறந்ததும் நடைபெறும். இந்த தேர்வுகள் இடைவெளியின்றி அடுத்தடுத்த நாட்களில் தொடர்ச்சியாக நடத்தப்படும். தினமும் காலை மற்றும் பிற்பகலிலும் தேர்வுகள் நடக்கும்.

இறுதி ஆண்டு மாணவர்களுக்கு மிக விரைவில் தேர்வு முடிவுகளை வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும். அடுத்த கல்வியாண்டில் பல்கலைக்கழகம், கல்லூரிகள் திறக்கப்படும் நாள், தேர்வு நடைபெறும் நாட்கள் ஆகியவை குறித்த அட்டவணை விரைவில் வெளியிடப்படும்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.