கஜகஸ்தானுக்கு மருத்துவ உதவி : இந்தியாவுக்கும், பிரதமர் மோடிக்கும் அந்நாட்டு அதிபர் ‘நட்பின் உச்சம் என நன்றி..!

Scroll Down To Discover
Spread the love

கொரோனா வைரஸ் நாடு முழுதும் வேகமாக பரவி வரும் நிலையில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க மலேரியா மருந்தான ‘ஹைட்ராக்சிக்ளோரோக்வின்’பயன்படுத்தப்பட்டு வருகிறது. உயிர்க்கொல்லி கொரோனா வைரசை எதிர்த்து போராடி வரும் நட்பு நாடுகளுக்கு, ‘ஹைட்ராக்சிக்ளோரோக்வின்’ மருந்தை இந்தியா ஏற்றுமதி செய்து வருகிறது. இந்த மருந்தை அமெரிக்கா பிரேசில் மாலத்தீவு உள்ளிட்ட பல நாடுகளுக்கு இந்திய அரசு ஏற்றுமதி செய்து வருகிறது. ஹைட்ராக்சிக்ளோரோக்வின் மருந்தின் தேவை உலகம் முழுதும் அதிகரித்து வருவதால் அதை பூர்த்தி செய்யும் நடவடிக்கைகளில் மேற்கு வங்க அரசு இறங்கியுள்ளது.

இந்நிலையில், மருத்துவ பொருட்களை அனுப்பி வைத்ததற்காக, இந்தியாவுக்கும், பிரதமர் மோடிக்கும் கஜகஸ்தான் அதிபர் காசிம் ஜோமார்ட் டோகாயேவ் நன்றி தெரிவித்துள்ளார்.
https://twitter.com/indembastana/status/1251724651555950592?s=20
இதுகுறித்து அவர் டுவிட்டரில் பதிவிட்டதாவது: கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த, கஜகஸ்தானுக்கு மருத்துவப் பொருட்களை நன்கொடையாக வழங்கியதற்காக, இந்திய அரசுக்கும் தனிப்பட்ட முறையில் பிரதமர் மோடிக்கும் மனமார்ந்த நன்றி. இது நட்பு, ஒற்றுமையின் உச்சம். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
https://twitter.com/TokayevKZ/status/1251564779233214470?s=20