5 மாநிலங்கள் எடுத்த அதிரடி முடிவு..!

Scroll Down To Discover
Spread the love

உலக நாடுகளை அச்சுறுத்திய கொரோனா வைரசின் தாக்கம் அதிகரித்து வருகிறது. கொரோனாவை கட்டுக்குள் வைக்க ஒவ்வொரு நாடுகளிலும் ஊரடங்கு உத்தரவு உள்ளிட்ட பல அவசரகால நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்தியாவிலும் 21 நாட்கள் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. சமூக இடைவெளி , மக்களுக்கான பொருளாதார பிரச்னைகளை எதிர்கொள்வதற்கான நிதி , சலுகைகள் வழங்கள் போன்ற பல நடவடிக்கைகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதையொட்டி, தட்டுப்பாட்டால் விலைவாசி உயர்ந்து இருப்பதாகவும், எனவே அத்தியாவசிய பொருட்களை பதுக்கினால் 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கும் வகையில் கடும் நடவடிக்கை எடுக்குமாறும் மாநிலங் களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது.

மேலும் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அச்சுறுத்தி வரும் நிலையில், வைரஸ் பரவலை கட்டுப்படுத்த இந்திய அரசு பல கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன. அதன், ஒருபகுதியாக, மக்கள் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்தியிருந்தார்.

இதன் தொடர்ச்சியாக, வீட்டில் இருந்து வெளியே வரும் மக்கள் கட்டாயம் முகக்கவசக் அணிந்திருக்க வேண்டும் என டெல்லி, மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்கள் உத்தரவிட்டுள்ளன. சண்டிகர் மற்றும் ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களிலும் இது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. டெல்லியில் கொரோனா வைரஸ் அதிகமாக உள்ள 20 பகுதிகளுக்கு அம்மாநில அரசு சீல் வைத்துள்ளது. மார்கஸ் மஸ்ஜித், நிசாமுதின் பஸ்தி உள்ளிட்ட 20 இடங்கள் கொரோனா தொற்று அதிகமுள்ள பகுதிகளாக கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து, அந்த பகுதிகளை போலீசார் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அப்பகுதிகளில் மக்கள் வீட்டை விட்டு வெளியே வர அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்களை அரசே வீடு தேடி வந்து வழங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.