டெல்லி தப்லிக் ஜமாத் மாநாடு ஏற்பாட்டாளர் மவுலானா மீது எஃப்ஐஆர் பதிவு..!

Scroll Down To Discover
Spread the love

டெல்லியில் மார்ச் முதல் வாரத்தில், ‛தப்லீக் ஜமாஅத்’ என்னும் இஸ்லாமிய மாநாடு நடைபெற்றது. இதில் 2000க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் பங்கேற்றனர். மூத்த மத குருக்கள் உட்பட சிலர் சவுதி அரேபியா, மலேசியா மற்றும் இந்தோனேஷியா போன்ற நாடுகளில் இருந்து வந்தவர்களும் பங்கேற்றுள்ளனர். மாநாடு முடிவடைந்ததும், பங்கேற்பாளர்கள் பல்வேறு மாநிலங்களுக்கு புறப்பட்டனர். அவர்களில் சிலருக்கு கொரோனா தொற்று அறிகுறிகள் தென்பட்டுள்ளன. ஜம்மு-காஷ்மீரை சேர்ந்த 65 வயது முதியவர் கடந்த 26ம் தேதி இறந்தபிறகு தான், மாநாட்டில் பங்கேற்ற பலருக்கு கொரோனா தொற்று பரவிய அபாயம் தெரியவந்தது.

இந்த மாநாடு நடந்த நிஜாமுதீன் பங்களாவாலி மசூதியில் 175 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. அவர்களுடன் தொடர்பில் இருந்த 2,000 பேர் தனிமையில் வைக்கப்பட்டுள்ளனர். பின்னர் மாநாட்டில் பங்கேற்ற, தமிழகம், தெலுங்கானா, கேரளா, மேற்குவங்கம் மாநிலத்தை சேர்ந்தவர்களுக்கு தொடர்பில் இருப்பவர்களும் பரிசோதனை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டனர்.



இதில், 20 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. 1000 பேர் தொற்று அறிகுறியுடன் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.அந்தக் கூட்டத்தில் பங்கேற்ற வெவ்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 2,137 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்கள், மருத்துவச் சோதனை செய்யப்பட்டு தனிமைப்படுத்தப்படுகின்றனர். இன்னும் பலர் அடையாளம் காணப்படவேண்டிய அவசியம் உள்ளது’ என்று தெரிவித்துள்ளது. இந்தநிலையில், தப்லிக் ஜமாத்தின் மவுலானா மீது தொற்றுநோய் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.