கொரோனா தடுப்பு பணி: மத்திய அரசுக்கு டாடா குழுமம் 1500 கோடி , நடிகர் அக்‌ஷய் குமார் 25 கோடி, பிசிசிஐ 55கோடி நிதியுதவி…!!

Scroll Down To Discover
Spread the love

கொரானாவால் உலகம் முழுவதும் பெரும் பொருளாதார சரிவை சந்தித்துள்ளது. இந்தியாவிலும் பொருளாதாரமும், சுகாதாரமும் பெரும் அளவில் பாதிப்பை சந்தித்துள்ளது. எனவே விரைவான அவசரகால ஏற்பாடுகள் மற்றும் பயனுள்ள சமூக பின்னடைவுக்கான திறன்களை உருவாக்குவது உள்கட்டமைப்பு மற்றும் நிறுவன திறன் புனரமைப்பு மேம்பாட்டுடன் இணைந்து செய்யப்பட வேண்டும். எனவே நாட்டு மக்கள் தங்களால் இயன்ற உதவியை வழங்கலாம் என பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்தார்.
https://twitter.com/RNTata2000/status/1243852348637605888?s=20
இந்நிலையில் டாடா அறக்கட்டளை சார்பில் ரூ.500 கோடி ரூபாயும், டாடா சன்ஸ் குழுமம் சார்பில் ரூ.1000 கோடி ரூபாயும் வழங்கப்படுகிறது. மொத்தம் ரூ.1500 கோடி கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைக்காக மத்திய அரசுக்கு வழங்கப்படும் என அறிவித்துள்ளது.


இதைபோல் நடிகர் அக்‌ஷய்குமார் ரூ. 25 கோடி நிதி வழங்குவதாக உறுதி அளித்துள்ளார்.


இதை தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்திருக்கும் அக்‌ஷய்குமார், “எல்லாமே மக்கள் உயிர் வாழ்வதற்காகத்தான். நாம் ஏதோவொன்றை செய்யவேண்டிய தேவை உள்ளது. என்னுடைய சேமிப்பிலிருந்து ₹25 கோடியை பிரதமர் நிதிக்கு அளிக்க உறுதியளிக்கிறேன். உயிர்களை காப்போம்” என்று தனது பதிவில் அக்‌ஷய்குமார் பதிவிட்டுள்ளார்.


இந்நிலையில் பிசிசிஐ தனது ட்விட்டர் பக்கத்தில் பிரதமரின் வேண்டுகோளின் படி கொரோனா நடவடிக்கைக்காக ரூ.51 கோடி நிதியுதவி அளித்துள்ளது