மின் கட்டணம் செலுத்தவில்லை என்றால் மின் இணைப்பு துண்டிக்கப்படாது- மின் பகிர்மானக் கழகம்

Scroll Down To Discover
Spread the love

நாடு முழுவதும் ஏப்ரல் 14 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் அனைத்து போக்குவரத்து சேவைகளும் முடக்கப்பட்டுள்ளனன. இந்த நிலையில், பல இடங்களில் மின் ஊழியர்கள் மின் கணக்கு நிலவரத்தை எடுக்காமல் உள்ளனர்.

இந்த நிலையில், திருவண்ணாமலையில் பலரது வீடுகளில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதாக தகவல் வெளியானது.

இந்த நிலையில், தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் வெளியிட்டுள்ள தகவலில், ‘மின் கட்டணம் செலுத்தவில்லை எனில் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என்ற தகவல் தவறானது. மார்ச் மாதத்திற்கு செலுத்த வேண்டிய தொகையை ஏப்ரல் 15 ஆம் தேதி வரை செலுத்தலாம். மின் கட்டணம் செலுத்தாததால் மின் இணைப்பு துண்டிக்கப்படாது’ என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.