தங்களது ஒரு நாள் சம்பளத்தை சிஆர்பிஎப் வீரர்களும், அதிகாரிகளும் பிரதமர் நிவாரண நிதிக்கு வழங்கினார்..!

Scroll Down To Discover
Spread the love

இந்தியாவிலும் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வருவதால், நாட்டு மக்கள் அனைவரும் பீதியில் உள்ளனர். முடிந்தளவுக்கு முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.இதனால் பல தனியார் நிறுவனங்களும் சரி, அரசு துறை அலுவலகங்களும் சரி, அதன் அதிகாரிகளையும், ஊழியர்களையும் வீட்டில் இருந்து வேலை செய்யுமாறு அறிவுறுத்தி உள்ளன.

கொரோனாவால் நாட்டின் ஒட்டு மொத்த பொருளாதார இயக்கமும் பாதிக்கப்பட்டு உள்ள நிலையில், சாமானிய மக்களுக்கு உதவும் வகையில் மத்திய அரசு ஒரு லட்சத்து 70 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு நிவாரணங்களை அறிவித்துள்ளது.


இந்நிலையில் கொரோனா தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், பிரதமரின் நிவாரண நிதிக்கு, சி.ஆர்.பி.எஃப். வீரர்கள் தங்களது ஒரு நாள் ஊதியமான 33 கோடியே 81 லட்சத்துக்கான காசோலையை வழங்கியுள்ளனர்.