டெல்லி சிஏஏ போராட்டம்: ஷாஹீன்பாக் பகுதி அருகே பெட்ரோல் குண்டு வீச்சு…!!

Scroll Down To Discover
Spread the love

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக, ஆங்காங்கே போராட்டங்கள் நடந்து வருகின்றன. தலைநகர், டில்லியில் உள்ள ஷாஹீன் பாக் பகுதியில், டிசம்பர், 15ம் தேதி முதல், தொடர் போராட்டம் நடந்து வருகிறது. ‘கொரோனா’ அச்சுறுத்தல் காரணமாக, பொது இடங்களில் மக்கள் கூடக்கூடாது என, டில்லி அரசு அறிவுறுத்தியது. எனினும், அதை பொருட்படுத்தாமல், போராட்டக்காரர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.


இந்நிலையில், போராட்டம் நடந்துவரும் பகுதிக்கு அருகே மர்ம பொருள் வெடித்தது. இதனால் அதிர்ச்சியடைந்த போராட்டக்காரர்கள், மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசியதாக குற்றம் சாட்டியுள்ளனர். குண்டு வெடித்து தீப்பிடித்த பகுதி சிறிது நேரத்தில் அணைக்கப்பட்டது. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.