கொரோனா பாதிப்புக்குள்ளான பாடகி கனிகா கபூர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு..!

Scroll Down To Discover
Spread the love

கொரோனாவை பரவலை தவிர்க்க பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என அரசு வலியுறுத்தி வருகிறது.ஆனால் இந்த விஷயத்தில் மிகுந்த அலட்சியத்தோடு செயல்பட்டதாக சர்ச்சையில் சிக்கியுள்ளார் இந்தி திரையுலகின் முன்னணி பாடகி கனிகா கபூர்.

உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த கனிகா கபூருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட முதல் பிரபலம் இவர்தான். கடந்த மார்ச் 11ந்தேதி லண்டனிலிருந்து திரும்பிய கனிகா கபூர், கொரானா வைரஸ் தொற்றுக்கான அறிகுறிகள் தென்பட்டபோதும் அதனைப் பொருட்படுத்தாமல் பல்வேறு இடங்களுக்கு சென்றதாகவும், 3 விருந்துகளில் கலந்துகொண்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்த விருந்துகளில் அரசியல்வாதிகள் உள்ளிட்ட விஜபிக்கள் பலர் கலந்துகொண்டுள்ளனர். அவர்களிடையே தற்போது கொரோனா அச்சுறுத்தல் அதிகரித்துள்ளது.இந்நிலையில் கொரோனா அறிகுறிகள் இருப்பது தெரிந்தும் விருந்துகளில் கலந்து கொண்டு அலட்சியமாக செயல்பட்டதாக பிரபல பாலிவுட் பாடகி கனிகா கபூர் மீது உத்தரபிரதேச போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.