என் மீது வைத்த நம்பிக்கையை காப்பற்றுவேன் – தமிழக பாஜக தலைவராக நியமிக்கப்பட்ட எல்.முருகன் பேச்சு..!!

Scroll Down To Discover
Spread the love

தமிழக பாஜக, தலைவராக இருந்த தமிழிசை சவுந்திரராஜன், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தெலுங்கானா கவர்னராக நியமிக்கப்பட்டார். அது முதல், அந்த பதவி காலியாக இருந்தது. அதனை தொடர்ந்து, இந்த பதவிக்கு சிலரின் பெயர்கள் அடிபட்டன.

இந்நிலையில், தமிழக பாஜக, தலைவராக எல்.முருகனை நியமித்து, அக்கட்சி தேசிய தலைவர் ஜே.பி. நட்டா உத்தரவிட்டுள்ளார். முருகன் தற்போது, தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் துணை தலைவராக உள்ளார். நாமக்கல்லை சேர்ந்த முருகன், சென்னையில் உள்ள அம்பேத்கர் சட்ட பல்கலையில், இளநிலை சட்டப்படிப்பும், சென்னை பல்கலையில், முதுகலை சட்டப்படிப்பும் படித்துள்ளார். சென்னை பல்கலையில், மனித உரிமைகள் சட்டம் குறித்து பி.எச்டி படித்து வருகிறார்.15 வருட வழக்கறிஞர் அனுபவம் கொண்ட இவர், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக உள்ளார்.

இது குறித்து முருகன் கூறுகையில்:- என் மீது நம்பிக்கை வைத்து பதவி கொடுத்துள்ளனர். அதற்கேற்றவாறு செயல்படுவேன். தலைவராக நியமிக்கப்பட்டதற்கு பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா,ஜேபி.நட்டா ஆகியோருக்கு நன்றி தெரிவித்து கொள்வதாக தெரிவித்துள்ளார்.