ஐ.எஸ் உடன் தொடர்பா..? டெல்லி வன்முறை: போராட்டங்களை தூண்டியதாக ஜஹான்ஜெப் சமி – ஹினாபஷிர் பேக் தம்பதியினர் கைது..!!

Scroll Down To Discover
Spread the love

டெல்லியின் வடகிழக்கு பகுதியில் குடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்பாளர்களுக்கும், ஆதரவாளர்களுக்கும் இடையே கடந்த 24-ந்தேதி ஏற்பட்ட மோதல் பெரும் கலவரமாக மாறி கல்வீச்சு, தீவைப்பு போன்ற வன்முறை சம்பவங்கள் நடைபெற்றன. 4 நாட்கள் நடைபெற்ற இந்த கலவரத்தில் 53 பேர் உயிரிழந்தனர். 200-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர்.


இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வரும் டெல்லி போலீசார் குடியுரிமை சட்டத்துக்கு எதிரான போராட்டங்களை தூண்டியதாக ஜஹான்ஜெப் சமி – ஹினா பஷிர் பேக் என்ற தம்பதியரை இன்று கைது செய்தனர்.
https://twitter.com/ANI/status/1236602452389941250?s=20
டெல்லி ஜாமியா நகர் பகுதியில் கைதான இவர்களுக்கும் இந்தியாவில் இருந்தவாறு ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தை ஆதரித்துவரும் கும்பலுக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாக டெல்லி போலீஸ் துணை கமிஷனர் பிரமோத் சிங் குஷ்வாஹா குறிப்பிட்டுள்ளார். இந்தியன் முஸ்லீம் யுனைட்’ என்ற பெயரில் ஒரு சமூக ஊடக தளத்தை தம்பதியினர் நடத்தி வருவதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளனர். மேலும் இது குடியுரிமைத் திருத்தச் சட்டம், குடிமக்களின் எதிர்ப்புப் பதிவேட்டில் அதிகமான மக்களை இணைப்பதை நோக்கமாகக் கொண்டு செயல்பட்டிருப்பதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.