திரெளபதி படத்தின் வசூல் சாதனை : மக்களுக்கு நன்றி சொன்ன இயக்குனர் மோகன்ஜி…!!

Scroll Down To Discover
Spread the love

அஜித்தின் மைத்துனர் ரிச்சர்ட், ஷீலா உட்பட பலர் நடித்துள்ள திரௌபதி படத்தை மோகன் ஜி இயக்கி உள்ளார். ஒரு குறிப்பிட்ட சாதியின் அடையாளமாக இந்தப் படம் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் படத்தில் அப்படி எதுவும் இல்லை.

இந்நிலையில் சமீபத்தில் வெளியான திரெளபதி படம் முதல் 2 வாரங்களில் ரூ. 10 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளதாக அப்படத்தின் இயக்குநர் மோகன் ஜி தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.


அவர் வெளியீட்டு உள்ள அந்த பதிவில்:- 300 திரையரங்குகளில் இரண்டாவது வாரம் தொடர்கிறது… இதுவரை ரூ. 10 கோடிக்கு மேல் மொத்தமாக வசூல் சாதனை புரிந்துள்ளது. சிறு குழு கொண்ட தமிழின் முதல் கூட்டு முயற்சித் திரைப்படத்தை இவ்வளவு பெரிய வெற்றி பெற வைத்த மக்களுக்கு நன்றி. தொடர்ந்து ஆதரவு கொடுங்கள் என்று கூறியுள்ளார்.