தொடர் அமளியில் ஈடுபட்ட காங்கிரஸ் எம்.பி.க்கள் 7 பேர் சஸ்பென்ட்

Scroll Down To Discover
Spread the love

பட்ஜெட் கூட்டத்தொடர் 2வது அமர்வு நடந்து வருகிறது. இன்றுடன் 4வது நாளாக தொடர்ந்து அமளி நிலவுகிறது. குடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறை குறித்து விவாதிக்க வேண்டும் என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சி எம்.பி.க்கள் நாள்தோறும் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் சபாநாயகர் இருக்கையில் ரமாதேவி அமர்ந்து தற்காலிகமாக அவையை நடத்தி இருந்தார். இந்நேரத்தில் அமளியில் ஈடுபட்ட எம்.பி.க்கள் சில பேப்பர்களை சபாநாயகரை நோக்கி வீசினர். அவை நடவடிக்கையில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதாக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கவுரவ் கோகை, டி.என்.பிரதாபன், தீன்கொரியா கோஷ், உன்னிதன், மாணிக்கம் தாக்கூர், குர்ஜித்சிங், பென்னி ஆகியேரை இந்த கூட்டத்தொடர் முழுவதும் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனை சபாநாயகர் ஓம்.பிர்லா உத்தரவாக பிறப்பித்துள்ளார்.


இது குறித்து காங்கிரஸ் எம்.பி.மாணிக்கம் தாக்கூர் கூறுகையில்:- மத்திய அரசின் அழுத்தத்தால் அவைக்கு வராமலேயே 7 எம்.பி.க்களை சபாநாயகர் சஸ்பெண்ட் செய்துள்ளார் என்று காங்கிரஸ் எம்.பி.மாணிக்கம் தாக்கூர் டெல்லியில் பேட்டியில் கூறியுள்ளார். அமித்ஷா அவைக்கு வர வேண்டும் என்று கோரிக்கை விடுத்ததற்காக நாங்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளோம் என கூறினார்