10 பொதுத்துறை வங்கிகள் 4 வங்கிகளாக இணைப்பு – அமைச்சரவை கூட்டத்தில் பிரதமர் மோடி ஒப்புதல்

Scroll Down To Discover
Spread the love

பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவைக் கூட்டம், நேற்று டெல்லியில் நடைபெற்றது. இதில் பொதுத்துறையைச் சேர்ந்த பத்து வங்கிகளை, நான்கு வங்கிகளாக இணைக்கும் திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கப்பட்டது.இதன்படி யுனைடெட் வங்கி மற்றும் ஓரியண்டல் வங்கி பஞ்சாப் நேஷனல் வங்கியுடன் இணைக்கப்டும்.

சிண்டிகேட் வங்கியை கனரா வங்கியுடனும் அலகாபாத் வங்கியை, இந்தியன் வங்கியுடனும் ஆந்திரா வங்கி மற்றும் கார்ப்ரேஷன் வங்கி யுனியன் பேங்க் ஆப் இந்தியாவுடன் இணைக்கப்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் வங்கிகள் இணைப்பு நடைமுறை, ஏப்ரல் ஒன்று முதல் அமலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.



இந்தக் கூட்டத்தை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்:- வங்கிகள் சட்டத்தில் புதிய திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக கூறினார். ஏர்- இந்தியா நிறுவனத்தில், வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் நூறு சதவீதம் வரை முதலீடு செய்யலாம் எனவும் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறினார். இதற்கு முன்பு 49 சதவீதம் மட்டுமே என்.ஆர்.ஐ.களுக்கு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது