இந்தியாவில் 3 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு – மத்திய அரசு தீவிர கண்காணிப்பு

Scroll Down To Discover
Spread the love

சீனாவின் ஹுபே மாநிலத்தின் வூகான் நகரில் பரவத் தொடங்கிய கொரோனா, உலகின் பல்வேறு நாடுகளிலும் பரவி வருகிறது. கொரோனாவால் இதுவரை 3,000 பேருக்கும் அதிகமானோர் பலியாகி உள்ளனர். 88,000 க்கும் அதிகமானோர் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர்.

சீனாவிலுள்ள உகான் பல்கலைக்கழகத்தில் மருத்துவம் படித்து வரும் கேரள மாணவி ஒருவரை கடந்த ஜனவரி 29ந்தேதி இந்த வைரஸ் தாக்கியது. சீனாவில் இருந்து நாடு திரும்பிய அவர் திருச்சூரில் உள்ள அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.இதேபோன்று உகான் பல்கலைக்கழகத்தில் மருத்துவம் படித்து வரும் மற்றொரு மாணவருக்கும் வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டது. அவர் கேரளாவில் உள்ள ஆலப்புழா அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதனை தொடர்ந்து, கேரளாவில் 3வது நபருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டது. காசர்கோடு பகுதியை சேர்ந்த அவர் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டார். தொடர்ந்து 3 பேருக்கு வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்ட உடன் கேரள அரசு அதனை ‘மாநில பேரிடர்’ என அறிவித்தது. தீவிர சிகிச்சைக்கு பின்னர் 3 பேருக்கும் பாதிப்பு குறைந்தது. சிகிச்சை முடிந்து அவர்கள் வீடு திரும்பினர். கேரள அரசும் ‘மாநில பேரிடர்’ அறிவிப்பினை தளர்த்தியது.


இந்நிலையில், இந்தியாவில் 2 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது உறுதி செய்யப்பட்டு உள்ளது.இத்தாலியில் இருந்து டில்லி வந்த ஒருவருக்கும், துபாயில் இருந்து வந்த தெலுங்கானாவை சேர்ந்த ஒருவருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் 2 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், இத்தாலியிலிருந்து ஜெய்பூர் வந்த நபருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.கொரோனா பாதிக்கப்பட்ட நபர்கள் தனிமைப்படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பில் உள்ளார்கள் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.இதனால் இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 3 ஆக உயர்வடைந்து உள்ளது.