ஆண்டுக்கு 60 லட்சம் பேரை மதம் மாற்றினால்: தமிழகத்தை அசைத்து பார்த்துவிடலாம் – மோகன்சி லாசரஸின் புதிய சர்ச்சை ..!!

Scroll Down To Discover
Spread the love

தூத்துக்குடி மாவட்டம் நாலுமாவடியில் இயேசு விடுவிக்கிறார் என்ற பெயரில் பிரமாண்ட ஜெபகூட்டம் நடத்தி வருபவர் போதகர் மோகன்சி லாசரஸ்

ஆண்டுக்கு 60 லட்சம் பேர் மதமாற்றம் செய்யப்பட்டால், 3 ஆண்டுகளில் தமிழகத்தை அசைத்து விடலாம் என கிறிஸ்துவ மதபோதகர் மோகன் லாசரஸ் பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவர் பேசிய வீடியோ பரவி வருகிறது.


அந்த வீடியோவில் லசாரஸ் பேசியுள்ளதாவது:- பெந்தகோஸ்தே மாமன்றத்தில் 38 ஆயிரம் சபைகள் இணைந்திருக்கின்றன. 60 லட்சம் (( இவர்களை விஸ்வாசிகள் என அவர் குறிப்பிடுகிறார்) உறுப்பினர்கள் இருக்கின்றனர். 2020 ல் ஒரு விஸ்வாசி, ஒரு ஆத்மாவை கொண்டு வந்தால், அடுத்த வருடம் 1.20 கோடி மக்கள். அதற்கடுத்த வருடம், அதற்கடுத்த வருடம் என 3 வருடத்தில் தமிழகத்தை அசைத்து விடலாம் என பேசியுள்ளார்.