கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டது

Scroll Down To Discover
Spread the love

கன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தா்கள் வந்து செல்கின்றனா்.இக்கோயிலுக்கு வரும் பக்தா்கள் நோ்ச்சை மற்றும் காணிக்கை செலுத்துவதற்காக 17 இடங்களில் உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளன. இந்த உண்டியல்கள் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை திறந்து எண்ணப்படுவது வழக்கம்.

அதன்படி, புதன்கிழமை காலை உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டன. மாலை வரை நடைபெற்ற உண்டியல் எண்ணப்பட்டதில் ரூ. 23லட்சத்து 72 ஆயிரத்து 18 காணிக்கையாக கிடைத்தது. மேலும் தங்கம் 9 கிராம் 200 மில்லி கிராம், வெள்ளி 508 கிராம் மற்றும் வெளிநாட்டு பணங்களும் கிடைத்தன.


இதில் குமரி மாவட்ட திருக்கோவில் இணை ஆணையர் அன்புமணி, இந்து அறநிலையத்துறை உதவி ஆணையர் ரெத்தினவேல் பாண்டியன், முதுநிலை கணக்கர் இங்கர்சால், பகவதி அம்மன்கோவில் மேலாளர் ஆறுமுகநயினார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.