பூர்வீக இல்லத்தை வேத பாடசாலை நடத்துவதற்காக காஞ்சி மடத்துக்கு தானமாக வழங்கினார் பாடகர் எஸ்பிபி..!

Scroll Down To Discover
Spread the love

பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் ஆந்திராவை சேர்ந்தவர். தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் உள்ளிட்ட இந்தியாவின் பல மொழிகளிலும், சுமார், 40 ஆயிரத்துக்கும் அதிகமான பாடல்களை பாடியவர்.


ஆந்திராவிலுள்ள நெல்லூரில், எஸ்பிபி.க்கு பரம்பரை வீடு ஒன்று உள்ளது. அவர் தற்போது சென்னையில் உள்ள வீட்டில் குடியிருக்கிறார். நெல்லூர் நகரில் திப்பராஜுவாரி தெருவில் உள்ள தனது பூர்வீக இல்லத்தை வேத பாடசாலை நடத்துவதற்காக காஞ்சி காமகோடி சங்கர மடத்திற்கு தானமாக அளிக்க உள்ளதாக அவர் அறிவித்திருந்தார்.

இந்நிலையில், காஞ்சி மடாதிபதி, ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளிடம் தனது வீட்டை, எஸ்.பி.பி., முறைப்படி ஒப்படைத்தார்.