பாகிஸ்தான் அராஜகம்:- இந்து மதத்தை சார்ந்த 14 வயது சிறுமியை கடத்தி மதமாற்றம் செய்து வலுக்கட்டாய திருமணம்..!

Scroll Down To Discover
Spread the love

பாகிஸ்தானில், ஹிந்துக்கள் சிறுபான்மையினராக உள்ளனர். இங்கு உள்ள சிந்து மாகாணத்தில் ஹிந்துக்கள் கணிசமாக வசிக்கின்றனர். இங்கு வசித்து வரும் விஜய குமார் என்பவர், போலீசில் ஒரு புகார் ஒன்றினை அளித்திருந்தார்.

அப்பகுதியில் வசித்துவரும் முஸ்லிம் மதத்தை சேர்ந்த அலி ரசா சோலாங்கி என்ற நபர் சிறுமி மிஹக் குமாரியை கடந்த 15-ம் தேதி கடத்திச்சென்றுள்ளார். பின்னர் அச்சிறுமியை முஸ்லிம் மதத்திற்கு கட்டாய மதமாற்றம் செய்து, வலுக்கட்டாயமாக திருமணம் செய்துள்ளார். இது குறித்து சிறுமியின் தந்தை போலீசாரிடம் புகார் கொடுத்தார்

அந்த புகாரின் அடிப்படையில் அலி ரசாவிடமிருந்து மிஹக் குமாரியை போலீசார் மீட்டனர். இதைதொடர்ந்து, இருவரையும் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இதையடுத்து, இந்த பிரச்னைக்கு தீர்வு ஏற்படும் வரை, அந்த பெண்ணை, கராச்சியில் உள்ள பெண்கள் பாதுகாப்பு இல்லத்தில் தங்க வைக்கும்படி, நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.

மேலும் பாகிஸ்தானில் இந்து பெண்கள் கடத்தி வலுக்கட்டாயமாக மதமாற்றம் செய்யப்பட்டும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்துவருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.