மகள் மீது பாலியல் சீண்டல்: புகாரை திரும்பப் பெற மறுத்த தாய் வெட்டிக் கொலை..!

Scroll Down To Discover
Spread the love

உத்தரப்பிரதேசம் மாநிலம் கான்புரில் மகளை பலவந்தப்படுத்தியவர்கள் மீதான புகாரை திரும்பப் பெற மறுத்த தாய் ஜாமீனில் வெளியே வந்த அந்த கும்பலால் தமது வீட்டிலேயே வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

உபியில் சிறுமி ஒருவரை சிலர் மானபங்கப்படுத்த முயற்சித்ததைக் கண்டித்த அந்தப் பெணின் தாயார் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.இதையடுத்து நான்கு பேரை போலீசார் கைது செய்தனர். இந்த 4 பேருக்கும் ஜாமீன் வழங்கப்பட்ட நிலையில் வழக்கைத் திரும்பப்பெற அவர்கள் சிறுமியின் தாயை மிரட்டி வந்தனர். அவர் மறுத்துவிடவே கடந்த 9ம் தேதி பயங்கர ஆயுதங்களுடன் வீட்டுக்குள் புகுந்த அந்த 4 பேரும் அப்பெண்ணை சரமாரியாக தாக்கினர்.

https://twitter.com/saurabh3vedi/status/1218131924511645696?s=19

இதன் கணொளியும் சமுக வலைதளத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை உள்ளது. இத்தாக்குதலில் பாஜகவின் உள்ளூர் தலைவியான அவருடைய சகோதரியும் படுகாயம் அடைந்தார். இந்நிலையில் நேற்று சிகிச்சை பலனளிக்காமல் சிறுமியின் தாய் உயிரிழந்தார். குற்றவாளிகள் 3 பேரை மீண்டும் கைது செய்த போலீசார் தப்பியோடிய ஒருவனைத் தேடி வருகின்றனர்.