நிர்பயா வழக்கு: குற்றவாளிகளை பிப்ரவரி மாதம் 1-ம் தேதி தூக்கலிட டெல்லி பாட்டியாலா கோர்ட் உத்தரவு

Scroll Down To Discover
Spread the love

டெல்லி மருத்துவ மாணவி நிர்பயா கற்பழித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகள் 4 பேரையும் வரும் 22-ம் தேதி தூக்கில் போடுவதற்கு டெல்லி விசாரணை கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது. அதன்படி திகார் சிறையில் தூக்கிலிடுவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.தனது தண்டனையை நிறுத்தி வைக்கக்கோரி 4 குற்றவாளிகளில் ஒருவரான முகேஷ் சிங் கருணை மனு அனுப்பினார்.

இந்த கருணை மனுவானது டெல்லி அரசு மற்றும் டெல்லி துணை நிலை ஆளுநரால் நிராகரிக்கப்பட்டது. பின்னர் உள்துறை அமைச்சகமும் கருணை மனுவை நிராகரித்து, ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்தது. அதில், முகேஷ் சிங்கின் கருணை மனுவை நிராகரிக்கும்படி ஜனாதிபதிக்கு கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. உள்துறை அமைச்சகத்தின் இந்த கோரிக்கையை ஏற்ற ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், கருணை மனுவை நிராகரித்து உத்தரவிட்டுள்ளார். இதன்மூலம் முகேஷ் சிங்கை தூக்கிலிடுவதற்கான தடை நீங்கி உள்ளது.

இந்நிலையில் நிர்பயா வழக்கின் குற்றவாளிகள் நால்வருக்கு பிப்ரவரி 1-ஆம் தேதி தூக்கு தண்டனையை நிறைவேற்ற தில்லி பாட்டியாலா நீதிமன்றம் வாரண்ட் பிறப்பித்துள்ளது. அதன்படி குற்றவாளிகள் நால்வரையும் முதலில் தீர்மானிக்கப்பட்ட ஜனவரி 22 -ற்கு பதிலாக வரும் பிப்ரவரி 1-ஆம் தேதி காலை 6 மணிக்கு தூக்கிலிட வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.