திருப்பதி விமான நிலையத்தின் பெயர் மாற்ற முடிவு – இந்திய விமான துறைக்கு திருப்பதி தேவஸ்தானம் பரிந்துரை..!

Scroll Down To Discover
Spread the love

ஆந்திரா மாநிலம் திருப்பதியில் ரேணிகுண்டா விமான நிலையம் உள்ளது. இந்த விமான நிலையத்தின் பெயரை ஸ்ரீ வெங்கடேஸ்வரா சர்வதேச விமான நிலையம் (Sri Venkateswara International Airport) எனப் பெயர் மாற்ற என திருப்பதி தேவஸ்தானம் போர்டு இந்திய விமான போக்குவரத்துத் துறைக்கு பரிந்துரை செய்துள்ளது.

இந்த தகவலை தேவஸ்தானம் போர்டு தலைவர் பி.ஆர். நாயுடு தெரிவித்துள்ளார்.மேலும், கர்நாடக அரசின் நில ஒதுக்கீடு நிலுவையில் உள்ள நிலையில், பெங்களூருவின் முக்கியப் பகுதியில் ஸ்ரீவாரி கோவில் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது.

மத்திய அமைச்சர் குமார சுவாமி, திருப்பதி தேவஸ்தான போர்டுக்கு 100 மின்சார பேருந்துகள் வழங்க ஒப்புக்கொண்டுள்ளார். திருப்பதியில் நிலத்தை குத்தகைக்கு எடுத்து கோவில் பிரசாதங்களுக்கு பயன்படுத்தப்படும் நெய், தண்ணீர் மற்றும் உணவுப் பொருட்களை பரிசோதனை செய்ய ஆய்வகம் உருவாக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.