மீண்டும் குறிவைக்கப்படும் செந்தில் பாலாஜி … சென்னை, கரூரில் அமலாக்கத்துறை சோதனை..!

Scroll Down To Discover
Spread the love

கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பரான சங்கர் உள்ளிட்ட மூவரது வீடுகளில், கேரள மாநிலத்திலிருந்து வந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். சென்னையிலும் பல்வேறு இடங்களிலும் சோதனை நடத்தினர்.

கரூர் கோதை நகர் சக்தி மெஸ் உரிமையாளர் கார்த்திக் என்பவர் வீட்டில் கேரளா, தெலுங்கானா மாநில மத்திய பாதுகாப்பு காவலர்கள் உதவியுடன் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

கரூர் 80 அடி சாலை பகுதி அமைந்துள்ள செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பரான சங்கர் உள்ளிட்ட மூவரது வீடுகளில் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

ராயனூர் பகுதியில் அமைந்துள்ள கொங்கு மெஸ் உரிமையாளர் மணி என்பவர் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியதாக தெரிகிறது. சென்னையிலும் பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.