சபரிமலை ஐயப்பன் கோவிலில் சபரிமலை ஐயப்பன் கோவிலில் மகரவிளக்கு பூஜை ..!மகரவிளக்கு பூஜை

Scroll Down To Discover
Spread the love

சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவிலில் நடைபெறும் பூஜைகளில் பிரசித்திபெற்றது மகர விளக்கு பூஜை ஆகும். இந்த ஆண்டு மகரவிளக்கு பூஜைக்காக கடந்த டிசம்பர் மாதம் 30-ஆம் தேதி சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டது. நாளை மகர விளக்கு பூஜை நடைபெறுகிறது.

மகர விளக்கு பூஜையின்போது சுவாமி ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் திருவாபரணங்கள் அடங்கிய பெட்டி பந்தளம் அரண்மனையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு இருக்கும். மகரவிளக்கு பூஜையையொட்டி இந்த திருவாபரண பெட்டி பந்தளம் அரண்மனையில் இருந்து சபரிமலை நோக்கி புறப்பட்டது. இந்த திருவாபரண பெட்டி சபரிமலை சன்னிதானத்தை வந்தடையும். அதைத் தொடர்ந்து சுவாமி ஐயப்பனுக்கு விசே‌ஷ தீபாராதனை காட்டி மகர விளக்கு பூஜை நடைபெறும்.

சபரிமலையில் பக்தர்கள் குவிந்து உள்ளதால் அங்கு போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. மேலும், புல்லுமேடு, பாஞ்சாலிமேடு, பாண்டித்தாவளம், பருந்துப்பாறை உள்ளிட்ட பல்வேறு மலைப் பகுதிகளுக்கும் சென்று மகர ஜோதியை ஐயப்ப பக்தர்கள் தரிசிக்க உள்ளதால், சபரிமலை சன்னிதானம் மட்டுமின்றி மற்ற மலைப் பகுதிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது