17 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை – கல்லூரி மாணவர்கள் 7 பேர் கைது..!

Scroll Down To Discover
Spread the love

கோவையில் 17 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய கல்லூரி மாணவர்கள் ஏழு பேரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.

கோவையில் உள்ள இரண்டு தனியார் கல்லூரிகளில் படிக்கும் ஏழு மாணவர்கள், குனியமுத்தூர் பகுதியில் அறை எடுத்து தங்கி உள்ளனர். இவர்கள் சமூக வலைதளம் மூலம் கோவையைச் சேர்ந்த 17 வயது சிறுமியை சமூக வலைதளம் மூலம் தொடர்பு கொண்டனர். ஆசை வார்த்தை கூறி, கடந்த ஞாயிற்றுக்கிழமை தங்களது அறைக்கு வரவழைத்து பலாத்காரம் செய்துள்ளனர்.

சிறுமி குறிப்பிட்ட நேரத்திற்கு வீடு திரும்பாத காரணத்தினால், அவரது பாட்டி போலீசில் புகார் அளித்தார். வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை, சிறுமி இருக்குமிடத்தை கண்டுபிடித்தனர். அவரை மீட்டு விசாரணை நடத்திய போது, சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டது தெரியவந்தது. இதனையடுத்து ஏழு மாணவர்களை போலீசார் கைது செய்து அவர்களின் மொபைல்போன்களை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து விசாரணை நடக்கிறது.