இந்தியாவில் ஓட்டு சதவீதத்தை அதிகரிப்பதற்காக வழங்கப்பட்ட நிதி – நிறுத்திய எலான் மஸ்க்…?

Scroll Down To Discover
Spread the love

இந்தியாவில் ஓட்டு சதவீதத்தை அதிகரிப்பதற்காக வழங்கப்பட்டு வந்த நிதியை எலான் மஸ்க் தலைமையிலான டிஓஜிஇ குழு நிறுத்தி உள்ளது.

அமெரிக்க அதிபராக பதவியேற்ற டிரம்ப், அரசின் செலவினங்களை குறைப்பதற்காக டி.ஓ.ஜி.இ., எனப்படும் சிறந்த நிர்வாகத்துக்கான துறை என்ற அரசு துறை ஒன்றை உருவாக்கி உள்ளார். இத்துறையின் தலைவராக எலான் மஸ்க் உள்ளார். இக்குழுவானது பல நாடுகளுக்கு வழங்கப்படும் நிதியுதவியை நிறுத்தி வருகிறது.

இந்நிலையில், இக்குழுவானது, ‘ இந்தியாவில் ஓட்டு சதவீதத்தை அதிகரிப்பதற்காக வழங்கப்பட்டு வந்த 21 மில்லியன் டாலர்( இந்திய மதிப்பில் 182 கோடி ரூபாய்) நிதியை நிறுத்தி வைக்க உத்தரவிட்டு உள்ளது.

மேலும், வங்கதேசத்தில் அரசியல் ஸ்திரத்தன்மை ஏற்பட வழங்கி வந்த 21 மில்லியன் டாலர்

மொசாம்பிக் நாட்டிற்கு வழங்கி வந்த 10 மில்லியன் டாலர்

கம்போடியாவில் இளைஞர்கள் திறனுக்காக வழங்கி வந்த 9.7 மில்லியன் டாலர்

கம்போடியாவில் சுதந்திரமான குரல்களை பலப்படுத்துவதற்காக வழங்கப்பட்டு வந்த 2.3 மில்லியன் டாலர்

பராகுவே சிவில் அமைப்பு மையத்திற்கு வழங்கி வந்த32 மில்லியன் டாலர்

பாலின சமத்துவம் மற்றும் பெண்கள் அதிகார மையத்திற்கு வழங்கிவந்த 40 மில்லியன் டாலர்

செர்பியாவில் பொது கொள்முதல் திட்டத்தை மேம்படுத்த வழங்கப்பட்டு வந்த 14 மில்லியன் டாலர்

மோல்டோவாவிற்கு வழங்கப்பட்டு வந்த 486 மில்லியன் டாலர்

நேபாளத்திற்கு நிதி கூட்டாட்சிக்கு வழங்கப்பட்டு வந்த 20 மில்லியன் டாலர்

நேபாளத்திற்கு பல்லுயிர் பாதுகாப்புக்கு வழங்கப்பட்டு வந்த 19 மில்லியன் டாலர்

லைபீரியாவிற்கு வாக்காளர் நம்பிக்கை திட்டத்திற்கு வழங்கப்பட்ட 1.5 மில்லியன் டாலர்

மாலி நாட்டிற்கு சமூக ஒற்றுமைக்காக வழங்கப்பட்ட 14 மில்லியன் டாலர்

தென் ஆப்ரிக்காவில், ஜனநாயக பணிகளுக்காக வழங்கப்பட்ட 2.5 மில்லியன் டாலர்

ஆசியாவில், கற்றல் மேம்பாட்டை அதிகரிக்க வழங்கப்பட்ட 47 மில்லியன் டாலர்

கொசோவா ரோமா, அஷ்கலி மற்றும் எகிப்து ஆகிய நாடுகளுக்கு வழங்கப்பட்ட 2 மில்லியன் டாலர் நிதியையும் நிறுத்தி வைக்க எலான் மஸ்க் தலைமையிலான குழு உத்தரவிட்டு உள்ளது.