அயோத்தி ராமர் கோவில் ஒத்தி வையுங்கள் – பக்தர்களுக்கு அறக்கட்டளை வேண்டுகோள்

Scroll Down To Discover
Spread the love

அயோத்தி ராமர் கோவில் வருவதற்கு திட்டமிடும் பக்தர்கள், தங்கள் பயணத்தை 15 முதல் 20 நாட்கள் ஒத்திவைக்க வேண்டும் என்று ராமஜென்ம பூமி அறக்கட்ட்டளை வேண்டுகோள் விடுத்துள்ளது.

அயோத்தி ராம ஜென்ம பூமி தீர்த்த ஷேத்திர அறக்கட்டளை விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

கும்பமேளாவுக்கு வரும் பக்தர்கள், அயோத்தி ராமர் கோவிலுக்கும் வருவதால், கூட்டம் அதிகரித்துள்ளது. நெரிசல் தவிர்க்க, அயோத்தியில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதனால் பக்தர்கள் நீண்ட துாரம் நடந்து வர வேண்டிய நிலை உள்ளது.

நீண்ட தொலைவில் இருந்து வரும் பக்தர்கள், சிரமம் இன்றி பாலராமரை தரிசிப்பதற்காக, அருகேயுள்ள பகுதிகளை சேர்ந்தவர்கள், தங்கள் அயோத்தி வருகையை, 15 முதல் 20 நாள் தள்ளிப்போட வேண்டும். வசந்த பஞ்சமிக்கு பிறகு வந்தால் சிரமம் இன்றி தரிசனம் பெறலாம். இவ்வாறு அறக்கட்டளை நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

பிரயாக்ராஜில் கும்பமேளாவில் மௌனி அமாவாசைக்கான ‘முக்கிய ஸ்நானம்’ (முக்கிய நீராடல் சடங்கு) ஜனவரி 29, 2025 அன்று நடைபெற உள்ளது. இந்த புனித நாளில் 10 கோடி பக்தர்கள் புனித நீராடுவார்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இதனால் தான் முன்னெச்சரிக்கையாக, இந்த வேண்டுகோளை ராமஜென்ம பூமி அறக்கட்டளை விடுத்துள்ளது.

கடந்த மூன்று நாட்களில், அயோத்தி ராமர் கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிகரித்துள்ளது; இதனால் பக்தர்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாவதாக, ராம ஜென்ம பூமி அறக்கட்டளை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.